/*--------MBT TOC-----*/ .judul-label{ background-color:#E5ECF9; font-weight:bold; line-height:1.4em; margin-bottom:5px; overflow:hidden; white-space:nowrap; vertical-align: baseline; margin: 0 2px; outline: none; cursor: pointer; text-decoration: none; font: 14px/100% Arial, Helvetica, sans-serif; padding: .5em 2em .55em; text-shadow: 0 1px 1px rgba(0,0,0,.3); -webkit-border-radius: .5em; -moz-border-radius: .5em; border-radius: .5em; -webkit-box-shadow: 0 1px 2px rgba(0,0,0,.2); -moz-box-shadow: 1px 1px 4px #AAAAAA; box-shadow: 0 1px 2px rgba(0,0,0,.2); color: #e9e9e9; border: 2px solid white !important; background: #6e6e6e; background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#888), to(#575757)); background: -moz-linear-gradient(top, #888, #575757); filter: progid:DXImageTransform.Microsoft.gradient(startColorstr='#888888', endColorstr='#575757'); } .data-list{ line-height:1.5em; margin-left:5px; margin-right:5px; padding-left:15px; padding-right:5px; white-space:nowrap; text-align:left; font-family:"Arial",sans-serif; font-size:12px; } .list-ganjil{ background-color:#F6F6F6; } .headactive{ color: #fef4e9; border: 2px solid white !important; background: #1C8DFF; background: -webkit-gradient(linear, left top, left bottom, from(#9dc2e7), to(#438cd2)); background: -moz-linear-gradient(top, #9dc2e7, #438cd2); filter: progid:DXImageTransform.Microsoft.gradient(startColorstr='#9dc2e7', endColorstr='#438cd2'); } Blogger Widgets
Scrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text GeneratorScrolling Glitter Text Generator

Popular Posts

Blogger Widgets
Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

Tuesday, November 13, 2012

சன் டிவி

நேரடித் தொலைக்காட்சி
(நினைவருவதற்கு சில நொடிகள் காத்திருக்கவும் (please wait some mins for loading)

Saturday, August 18, 2012

அன்பார்ந்த ஆசிரியர்கள் / நண்பர்களே தங்களின் மேலான கவனத்திற்கு!

மத்திய அரசு நாடு முழுவதும்மொத்தமாக தொகுப்பு எஸ்.எம்.எஸ் (GROUP SMS) அனுப்ப 15 நாள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆகையால் நம்முடைய KALVISAITHI SMS சேவை,அரசால் நாடு முழுவதும் தடை நீக்கப்படும் வரை தங்களுக்கு வராது என்பதை தெரிவித்து கொள்கிறோம். இத்தடையால் ஒரே தடவையில் 5 SMSக்கு மேல் அனுப்ப முடியாது.ஆனால் நம்முடைய சேவை இணையதளத்தில் UPDATE  தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி அரசால் வெளியிடப்பட்டுள்ள இத்தடைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

வேலைவாய்ப்புடிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில் புராஜக்ட் அசிஸ்டெண்ட் பணி

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இயங்கி வரும் சென்டர் ஃபார் விண்ட் எனர்ஜி டெக்னாலஜியில் காலியாக உள்ள புராஜக்ட் அசிஸ்டெண்ட் பணிக்குதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: புராஜக்ட் அசிஸ்டெண்ட் பணிகல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் அண்ட் கண்ட்ரோல், கணிப்பொறியியல், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்றஏதாதவது ஒரு துறையில் பி.இ., அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினீயரிங் துறையில் டிப்ளமோவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: பி.இ., பி.டெக் முடித்தவர்கள் 28 வயதிற்குட்பட்டவர்களாகவும், டிப்ளமோ முடித்தவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cwet.tn.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.08.2012

Friday, August 17, 2012

திருவனந்தபுரம் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி

திருவனந்தபுரத்திலுள்ள CSIR- National Institute for interdisciplinary Science and Technology (NIIST) -ல் கீழ்கண்ட பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Officer
கிரேடு: 3 (3)
காலியிடம்: 1(பொது)
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடுசம்பளம் ரூ. 4,600
வயதுவரம்பு: 10.09.2012 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் ,மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., பி.டெக் படிப்பில் 55 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
கிரேடு: 3 (1)
காலியிடம்: 1 (பொது)
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடுசம்பளம் ரூ. 4,200வயதுவரம்பு: 10.09.2012 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், டிப்ளமோ படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பணி: Technical Assistant
கிரேடு: 3 (1)
காலியிடம்: 1 (எஸ்டி)
சம்பளம்: ரூ.9,300 - 34,800 கிரேடுசம்பளம் ரூ. 4,200
வயதுவரம்பு: 10.09.2012 அன்று 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: வேதியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.  ஆங்கீகாரம் பெற்ற நிறுவனம், அமைப்புகளில் தொழிற்சாலை சார்ந்த அல்லது இன்டஸ்ட்ரியல் அனலிஸ்ட் தகுதியை ஒரு வருட முழுநேர தகுதியாக பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.niist.res.inஎன்ற இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 (SC/ST/PWD பிரிவை சேர்ந்த பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது) கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் The Director, NIIST என்ற பெயரில் திருவனந்தபுரத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 10.09.2012பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Administrative Officer, National Institute for Interdisciplinary,
Science and Technology Industrial Estate P.O. Pappanamcode, Tiruvananthapuram - 695019

Monday, June 18, 2012

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்

இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னைஉயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

Tuesday, June 5, 2012

கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல்.

கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!

சென்னை ஐகோர்ட்டால், 15 சதவீதம்கட்டணம் உயர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட, 384 தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகள் மட்டுமே, 15சதவீத கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும், மற்ற பள்ளிகள்உயர்த்தக்கூடாது எனவும் துறை தெரிவித்துள்ளது.தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக, ரவிராஜ பாண்டியன் இருந்தபோது, அவர் நிர்ணயித்த கட்டணம் போதாது எனக் கூறி, பல்வேறு தனியார் பள்ளிகள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில், சம்பந்தபட்ட பள்ளிகள் இடைக்கால நிவாரணமாக, 15 சதவீத கட்டணத்தை உயர்த்தி வசூலித்துக் கொள்ளலாம் என, ஐகோர்ட் தீர்ப்பு கூறியது. ஆனால், வழக்கு தொடராத பள்ளிகள் எல்லாம், கூடுதல் தொகை வசூலித்து வருவதாக, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு புகார்கள் வந்தபடி இருக்கின்றன.இதையடுத்து, 15 சதவீத கட்டணம் உயர்த்திக் கொள்ள, ஐகோர்ட்டால் அனுமதிக்கப்பட்ட, 384 தனியார் பள்ளிகளின் பெயர் பட்டியலை, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. மாவட்ட வாரியாக, பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.சென்னை மாவட்டத்தில், ரோசரி மெட்ரிகுலேஷன், டி.ஏ.வி., கோபாலபுரம், சூளைமேடு பள்ளிகள்,அடையாறு செயின்ட் மைக்கேல்ஸ் உட்பட பல பிரபலமான பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட 74 பள்ளிகள், சென்னை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன.இதேபோல், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், அதிகமான பள்ளிகள் இப்பட்டியலில் உள்ளன. இதுகுறித்து, இயக்குனரக வட்டாரம் கூறும்போது,"பெற்றோருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, இணையதளத்தில் பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெறாத பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து இயக்குனரகத்திற்கு, பெற்றோர் தகவல் தெரிவிக்கலாம்; மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடமும் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றனர்.

15% கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதியுள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும்: தமிழக அரசு.

கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதி உள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.இது தொடர்பான மனுவை மாநில பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் எஸ். வேதரத்தினம் சார்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி. சஞ்சய் காந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.மனுவில் கூறியுள்ளதாவது: நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து சில தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மே 3-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், நீதிமன்றத்தை அணுகியுள்ள பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பற்றி கல்விக் கட்டண நிர்ணயக் குழு மறு ஆய்வு செய்ய வேண்டும். இதற்கிடையே நடப்புக் கல்வியாண்டுக்காக கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்தக் கட்டணத்தைவிட 15 சதவீத கூடுதல் கட்டணத்தை அந்தப் பள்ளிகள் வசூலித்துக் கொள்ளலாம்.மேலும், இந்த உத்தரவின்படி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பள்ளிகள் மட்டுமே 15 சதவீத கூடுதல் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. எனினும், சில ஊடகங்களில் நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்பு திரித்துக் கூறப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும், பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். இந்த சூழலைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை அணுகாத பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தகுதியுள்ள பள்ளிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும்,அந்தப் பள்ளிக்கு கட்டண நிர்ணயக் குழுவால் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டக் கட்டணம், நீதிமன்றத்தின் இப்போதைய உத்தரவு மூலம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் ஆகியவை பள்ளி அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட வேண்டும்.இந்தக் கட்டண வசூல் என்பது, கட்டண நிர்ணயக் குழுவின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்பதும், ஒருவேளை குழு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்திருந்தால் எதிர்காலத்தில் திருப்பித் தரப்படும் என்பதையும் பெற்றோருக்குத் தெரியப்படுத்திட வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு உட்படாத பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு ஏற்கெனவே நிர்ணயித்தக கட்டணத்தை மட்டுமே வசூலித்து, அதற்கான ரசீதை பெற்றோருக்கு தர வேண்டும்.ஆகவே, கடந்த மே 3-ம் தேதி பிறப்பித்த தீர்ப்புடன் சேர்த்து மேற்கண்ட விளக்கங்களும் இடம்பெறும் வகையில் உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தமிழக அரசு சார்பில் கோரப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்குஐகோர்ட் கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:புதுக்கோட்டை மாவட்டத்தில் கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல் பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு எதிரானது. 2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்கு முந்தைய அறிவிப்பாணைபடி பணி நியமனம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. நான் 2009ம் ஆண்டில் வெளியான அறிவிப்பாணைபடி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, 2010 செப்டம்பர் 15ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதில்லை.ஆனால், 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகுபணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என அரசு உத்தரவிட்டிருப்பதால், நானும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டியதுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுக்கு எதிரானது. எனவே, ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தமிழக அரசு 2010 ஆகஸ்ட் 23ல் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல், சிவகங்கை வீரபட்டி பஞ்சாயத்து யூனியன் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் விஜய், தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளார். இரு மனுக்களையும் நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் லஜபதிராய், திருமுருகன் ஆஜராகினர்.மனுவை விசாரித்த நீதிபதி, அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட் டார்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (CPS) எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்குஎதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு :தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டப்படி சில விவரங்க
ள் கேட்கப்பட்டது. 01.04.2003 முதல் 28.02.2010 வரை நியமிக்கப்பட்டவர்களில் இயக்குனர் அளித்துள்ள தகவலின் படி 25 பேர் மரணமடைந்துள்ளனர் 2பேர் ஒய்வுப் பெற்றுள்ளனர். ஆனால் இன்றைய தேதிப்படி 56 பேர்மரணமடைந்துள்ளனர். 4 பேர் ஓய்வுப்பெற்றுள்ளனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் தற்போதிய நிலை குறித்து தீக்கதிர் நாளிதழில் வெளியிட்ட கட்டுரை பதிவிறக்கம் செய்ய..

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.திண்டுக்கல் மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : -அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழ் ஏராளமான நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.இது போன்ற தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்ப கடந்த 2007ஆம் ஆண்டு தமிழக அரசுஉத்தரவிட்டது. அதன்படி பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகு காலிப்பணியிடங்கள் இல்லை என்று கூறி மீண்டும் இடைநிலை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர்.இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 - 2012 கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில் 1485 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசானை ப்படி அப்பணியிடங்கள் பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப வேண்டும். ஆனால் அப்பணியிடங்கள் நேரடியாக நிரப்ப உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை 23.01.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதுபோன்று நேரடியாக நிரப்பும் பட்சத்தில் எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடும். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் நடவடிக்கை 2007 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக உள்ளது.எனவே அனைவருக்கும் கல்வி இயக்கம்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நேரடியாக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும்.நேரடியாக ஆசிரியர்கள் தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும். பி.எட்., முடித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் அந்த பணியிடங்கள் நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதே போன்று மதுரை, விருது நகர், தேனி, கரூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மேலும் 17 இடைநிலை ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் எம்.அஜ்மல்கான், கே.அப்பாதுரை ஆகியோர் ஆஜாராகி வாதாடினர்.மனுக்களை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 18 பேருக்கும் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக வைத்திருக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு பதிலளிக்க நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார்.